அதிர்ச்சி வீடியோ... திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்தவர் திடீரென சுருண்டு விழுந்து மரணம்!

 
நடனத்தில் மரணம்
 கொரோனா காலகட்டத்திற்கு பிறகு திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.  உடற்பயிற்சியின் போது மரணம், மணமேடையில் மரணம், நடனம் ஆடும் போது மரணம், நடந்து வரும் போது சுருண்டு விழுந்து பலி , கார் ஓட்டும் போது மாரடைப்பால் பலி என திடீர் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தின் நவல்கர் தாலுகாவில், தனது மருமகனின் திருமணத்தில் ஒருவர் பாரம்பரிய ராஜஸ்தானி மட்கா நடனம் ஆடிக் கொண்டிருந்தார். திடீரென  சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் திருமணநிகழ்வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .



இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் மயங்கி விழுவதற்கு சில விநாடிகள் வரை கூட  கமலேஷ் டாக்கா மகிழ்ச்சியுடன் தலையில் மட்காவுடன் நடனமாடி ஆடி மகிழ்கிறார்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அவரது திடீர் மரணத்திற்கான காரணம் குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  அவரது திடீர் மரணத்திற்கான காரணம் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web