சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்.. களைந்த குளவி கூடு.. பரிதாபமாக பலியான இருவர்!

 
குளவி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆடன்தொரை பகுதிக்கு கோவை சிட்டாபுதூர் பகுதியை சேர்ந்த 9 பேர் கொண்ட 3 குடும்பத்தினர் உல்லாச சுற்றுலா வந்திருந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள அருவியில் குளிக்கச் சென்றனர். அப்போது அங்கு இருந்த குளவி கூடு கலைந்து குளவி அவர்களை  பலமாக தாக்கியது.

அனைவரும் சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  கார்த்திகேயன் (56), ராஜசேகரன் (56) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுற்றுலா தலத்தில் செங்குலவி கடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள ரவி கண்ணன் (56) மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web