பகீர் வீடியோ... ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்த விமானம்... கத்தி கூச்சலிட்ட பயணிகள்!

 
விமானவிபத்து

 
விமானநிலையத்தில் ஓடு தளத்தில் சென்ற விமானம் ஒன்று அதிலிருந்து விலகி தாறுமாறாக ஓடி தவறி விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் தலைநகர் டக்காரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரான விமானம் ஒன்று  ஓடு தளத்தில் சென்றது.  போயிங் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 79 பயணிகள் உள்பட 85 பேர் இருந்தனர்.  சிறிது தூரம் ஓடுபாதையில் சென்ற அந்த விமானம் திடீரென தனது பாதையை விட்டு விலகி தாறுமாறாக ஓடத் தொடங்கியது.


 இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர்.   சிறிது தூரம் சென்ற அந்த விமானம் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக   மீட்பு படையினர் உடனடியாக பயணிகளை பத்திரமாக வெளியேற்றத் தொடங்கினர். எனினும் இந்த விபத்தில் 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து டக்கார் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web