திருப்பத்தூரில் பரபரப்பு.. .சி.ஐ.எஸ்.எப் பெண் வீரர் பகீர் குற்றச்சாட்டு!
திருப்பத்தூர் பெரிய காசிநாயக்கன்பட்டி வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன், திருஞானம். அண்ணன், தம்பி இருவருக்கும் சொந்தமான நிலம் கிடைப்பதில் நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய நிலத்தில் திருஞானம் என்பவர் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்த போது அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வெங்கடேசன் தாக்கியதில் திருஞானம் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி இருவரும் காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் வெங்கடேசன் மகன் நந்தகுமாரும் திருஞானம் தாக்கியதால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் திருஞானம், வெங்கடேசன் இருவரும் தனித்தனியாக கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், திருஞானம் அளித்த புகாரின் பேரில் கந்திலி போலீஸார் வெங்கடேசனை கைது செய்தனர்.

டெல்லியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காவலராக பணிபுரியும் வெங்கடேசனின் மகள் பூங்கொடி இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், “கந்டிலி போலீசார் தன்னிச்சையாக செயல்படுவதால் மன உளைச்சலில் உள்ளேன். என்னால் சரியாக வேலை செய்ய முடியவில்லை, உதவி கேட்டாலும் போலீசார் கேவலமாக நடந்து கொள்கின்றனர். நான் வாழ்வேனா, இறப்பேனா என்று தெரியவில்லை. இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
