கர்ப்பமாக்கிய பின் வேறொரு பெண்ணுடன் திருமணம்.. நள்ளிரவு முழுக்க நடுரோட்டில் காதலி தர்ணா... மணக்கோலத்தில் மாப்பிள்ளை கைது!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர்.எஸ். மணிநகரில் சுப்ரமணியன் (31) என்ற இளைஞர் பெற்றோருடன் வசித்து வருகிறார். மெக்கானிக் வேலை செய்து வரும் இவர், பண்ருட்டியை சேர்ந்த ரம்யா (29) பட்டதாரி பெண்ணை காதலித்து வந்துள்ளார். சுப்ரமணியன்- ரம்யா இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
அப்போது இருவரும் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். அப்போதெல்லாம் நெருக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ரம்யா கர்ப்பம் அடைந்த நிலையில் கர்ப்பத்தை கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அதை கலைத்து உள்ளார் சுப்பிரமணி.
பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி சுப்பிரமணியன் கடந்த 22ம் தேதி விழுப்புத்தில் உள்ள கோவிலில் வைத்து ரம்யாவுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் விழுப்புரத்தில் அறை எடுத்து முதலிரவை கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, சுப்ரமணியனுக்கு பெற்றோர் வேறொரு பெண்ணை பார்த்து திருமணத்துக்கு நிச்சயம் செய்துள்ளனர். இதில் திருமணம் செய்ய சுப்ரமணியன் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த தகவலை அறிந்த ரம்யா, பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ரம்யா இரவு முழுக்க காதல் கணவன் வீட்டு முன்பு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது தனக்கு தாலி கட்டி விட்டு, தன்னுடன் உல்லாசமாக இருந்து விட்டு இன்னொரு பெண்ணுடன் திருமணம் செய்வதை அனுமதிக்க முடியாது என கூறினார். இதனால் சுப்பிரமணியின் பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியேறி விட்டனர். இதனை அடுத்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், காதலித்து திருமணம் செய்த பெண்ணை, ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய காத்திருந்த சுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதாவது மணமேடையில் இரண்டாவது பெண்ணுக்கு தாலிக் கட்ட இளைஞர் சுப்பிரமணியன் தாயாராக இருந்த போது, அங்கு சென்று மணமேடையில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு பெண்ணின் வாழ்க்கை தப்பித்தது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!