சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத காவல் அதிகாரி.. பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி!

 
சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

சென்னை தரமணி காணகம் தெருவை சேர்ந்தவர் செந்தில், தச்சு தொழிலாளி. வீட்டில் மளிகைக் கடையும் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே வசிக்கும் வினோத் என்ற வாலிபர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருகிறார். வினோத், செந்திலின் மளிகைக் கடை முன் அமர்ந்து அவ்வப்போது தன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். இது பிடிக்காத செந்தில், கடையில் உட்கார வேண்டாம் என கூறி விரட்டினார்.

அடித்தே கொலை

இதனால் ஆத்திரமடைந்த வினோத், தனது நண்பர் அரவிந்துடன் சேர்ந்து 2021ம் ஆண்டு தனது மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த செந்திலை வழிமறித்து அரிவாளால் வெட்டினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து செந்தில் கொடுத்த புகாரின் பேரில் தரமணி போலீசார் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வினோத், அரவிந்த் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு 16வது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.ஆபிரகாம் லிங்கன் முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.மேலும், இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க முன்னாள் விசாரணை அதிகாரியும், தற்போதைய விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியுமான சி.ராமலிங்கத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் அவர் சாட்சியமளிக்க வரவில்லை. தொடர்ந்து மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டது.

‘லிவிங் டுகெதர்’ ஜோடிகளுக்கு இந்த உரிமை கிடையாது!! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் விசாரணை அதிகாரி ஆஜராகவில்லை. இதையடுத்து, சாட்சியம் அளிக்க முன்வராத விசாரணை அதிகாரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணி காரணமாக ஆஜராக முடியவில்லை என தெரிவித்தார்.இதை ஏற்க மறுத்த நீதிபதி ஆபிரகாம் லிங்கன், விசாரணைக்கு ஆஜராகாததற்கு அதிகாரி கூறிய காரணங்களை ஏற்க முடியாது எனக்கூறி, அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து, விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web