விவசாயம் செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை கன்னத்தில் அறைந்த போலீசார்.. விவசாயிகள் கொந்தளிப்பு! வைரலாகும் வீடியோ!

 
விவாசாயி

டெல்லியில் இருந்து கத்ரா இடையேயான தேசிய நெடுஞ்சாலை சுமார் ரூ.39,500 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த நெடுஞ்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் அதிகளவில் விவசாய நிலம் இருப்பதாக கூறி பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதோடுமட்டுமின்றி, இந்த திட்டத்தை ரத்து செய்யவேண்டும் இல்லையெனில் மாற்றுபாதையில் கொண்டுச்செல்ல வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் விவாசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இழப்பீடு வழங்கும் முன்பே நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வரையில் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.'


இந்நிலையில் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண் விவசாயி ஒருவரை போலீஸ் அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்தியில் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பெண் விவசாயியை கன்னத்தில் அறைந்த போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

விவாசாயி

போலீஸ் அதிகாரி பெண் விவசாயியை கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web