உ.பி. நெரிசல் விபத்து : சடலங்கள் குவிவதைப் பார்த்து அதிர்ச்சியில் உயிரிழந்த காவலர்!

 
ஹத்ராஸ்
 

உத்திரபிரதேச மாநிலம், ஹத்ராஸில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், நெரிசலில் சிக்கி அடுத்தடுத்து சடலங்கள் குவிவதைப் பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் அருகே ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் திரண்ட நிலையில், பாதுகாப்பு பணியில் 48 போலீசார் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டனர்.

உத்தரப்பிரதேசம்

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், அடுத்தடுத்து சடலங்கள் குவிவதைப் பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒருவர் உயிரிழந்தார்.கூட்டம் நடைபெற்ற இடத்தில் போதுமான காற்றோட்டம் இல்லாதது, அதிகளவில் அனல் வீசியது, ஒரே நேரத்தில் பலரும் வெளியேற முயற்சித்தது போன்ற காரணங்கள் தெரிய வந்துள்ளன. 

ஹத்ராஸ்
உயிரிழந்த காவலர் ரவி யாதவ், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் குழுவில் பணியமர்த்தப்பட்டிருந்தார். எட்டா மருத்துவக் கல்லூரியில் பணியில் ஈடுபட்டிருந்த ரவி யாதவ், சடலங்கள் குவிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்ததாகவும் உடனடியாக ரவி யாதவ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web