அதிர்ச்சி... போலீஸ்காரரின் வீட்டுக் கதவை உடைத்து நகை திருட்டு!
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே போலீஸ்காரரின் வீட்டு கதவை உடைத்து தங்க நகைகளையும், பொருட்களையும் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
குமரி மாவட்டம், கருங்கல் அருகே கம்பிளார் தேவாண்டிவிளையைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவருடைய மகன் லாசர். இவர் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்த லாசர், கடந்த 2ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுள்ளார்.

8ம் தேதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர் தங்கலீலா என்பவரிடம் லாசரின் வீடு திறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தங்கலீலாவின் மகன் ஜிஸ்பா அங்கு சென்றுப் பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
இது பற்றி லாசருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் கூறியபடி சோதனை செய்ததில், பீரோவில் இருந்த 2¾ பவுன் தங்கநகை மற்றும் வீட்டில் இருந்த செம்பு குட்டுவம், செம்பு குடம், டேபிள்பேன், மிக்ஸி, கிரைண்டர், 7 பட்டுச்சேலைகள் ஆகியவை மாயமாகி இருந்தன. வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகை மற்றும் பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து லாசரின் உறவினர் ஜிஸ்பா கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
