அதிர்ச்சி... 10 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த காவலர்!

 
போலீஸ்

குஜராத் மாநிலம் நவ்சாரி நகரில் வசித்து வருபவர்  சஞ்சய் பரியா. இவர்  போக்குவரத்து போலீசாக பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கு திருமணம் ஆகி வன்ஷ் என்ற 10 வயது மகன் உள்ளார். இந்நிலையில் மே 31ம் தேதி   வெள்ளிக்கிழமை சஞ்சய் பணிக்கு செல்லும் போது தனது மகனை உடல் அழைத்துச் சென்றுவிட்டார். இருவரும் வீடு திரும்பவே இல்லை. மனைவி அடுத்தடுத்து போன் செய்து விசாரிக்கலாம் என பார்த்தால் கணவரின் போன்  சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. 2 நாட்களுக்கு பிறகு நேற்று ஜூன் 2ம் தேதி சஞ்சய் தன்னுடைய மனைவியை தொடர்பு கொண்டு   செல்போனில் பேசியுள்ளார்.

போலீஸ்

அப்போது மகனை கொலை செய்து விட்டதாகவும் பணியிடத்தில் உள்ள அறையில் உடல் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்ததும்  உடனடியாக போலீசுடன் சென்று குறிப்பிட்ட இடத்தில் தன்னுடைய மகன் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்துள்ளான். அருகில்  பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலும் காலியாக கிடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து போலீசார் தலைமறைவாக உள்ள சஞ்சயை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web