புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை !! 3 நாட்களில் ரூ1280 அதிகரிப்பு!!

 
தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.  ஏப்ரல்  மாதம்  முழுவதுமே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.  பெரும்பாலான நாட்கள் விலை ஏறுமுகத்திலேயே இருந்தது.  அக்‌ஷய திருதியை ஒட்டி 2 நாட்கள் மட்டும் தங்கத்தின் விலை குறைந்தி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தங்கம்

ஆனால் மே மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகிறது.  அந்த வகையில்  இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன்  ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.46,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ25 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5,775க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.  

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

அதே நேரத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.83.70க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை  ரூ.83,700க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,280 வரை அதிகரித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மைய வங்கி கடன் வட்டியை 0.25% உயர்த்தியதே தங்கம் விலை உயர காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web