முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பூசாரி.. கோயில் திருவிழாவில் வினோத வழிபாடு!

 
ஜெயபால்

தூத்துக்குடி கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ உச்சி மகாகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. ஒருவார காலம் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கோவில் பூசாரி ஒருவர் முள் படுக்கையில் அமர்ந்து அருள்வாக்கு கூறுவது வழக்கம். இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அருள்வாக்கு பெறுகின்றனர்.

இந்தாண்டு விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. கோவில் நுழைவு வாயிலில் கருவை முள், உடைமுள், இலந்தை முள், கத்தாழை முள், சப்பாத்தி கள்ளி உள்ளிட்ட பல்வேறு வகையான முட்களால் 6 அடி உயரம், 10 அடி அகலத்தில் முள் படுக்கை அமைக்கப்பட்டது. முன்னதாக பத்ரகாளியம்மன் உச்சி மாகாளியம்மனுக்கு விரதம் இருந்து பூசாரி ஜெயபால் சிறப்பு பூஜைகள் செய்தார்.

அதையடுத்து, பூசாரி ஜெயபாலை பக்தர்கள் மேளம் முழங்க முள்செடிக்கு அழைத்து வந்தனர். பின்னர் முள் படுக்கையில் பக்தர்களுக்கு படுத்தவாறு அருள்வாக்கு கூறினார். இதனை தரிசனம் செய்ய சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோவில்பட்டி, பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web