அவசர அவசரமாக நாடு திரும்பும் பிரதமர்... இஸ்ரேல் பள்ளியில் ராக்கெட் தாக்குதல் !

 
நெதன்யாகு
 

இஸ்ரேல் காசா போரில் நேற்று பள்ளியில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30 பேர் பலியாகிஉள்ளனர். இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது . இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா சென்றுள்ள நிலையில் பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து   இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக நாடு திரும்புகிறார். டெல் அவிவ், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய நாளில் இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியிருப்பதாகத் தெரிகிறது.  
இஸ்ரேல்

காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 39000க்கும்  மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.  பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் கால்பந்து திடல் ஒன்றில் திடீரென நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.  தெற்கு லெபனான் மீது வான்வழியே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், ஹிஜ்புல்லா பயங்கரவாத குழுவை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டனர்.  அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.  இதனால், அமெரிக்காவில் இருந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக நாடு திரும்புகிறார் என பிரதமர்  அலுவலகம் தெரிவித்து உள்ளது.

காசா - இஸ்ரேல்

 லெபனானில் கிராமம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் அதற்கு பதிலடியாக, கோலன் ஹைட்சில் உள்ள ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தினோம் என தெரிவித்தது. இஸ்ரேலின் ராணுவ உயரதிகாரி டேனியல் ஹகாரி  ”உயிரிழந்தவர்கள் அனைவரும் 10 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளனர்.  அந்த அமைப்பின் முக்கிய தளபதிகளுக்கு எதிராக போர் தொடுக்கும்படி இஸ்ரேல் தலைவர்களிடம் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நெருக்கடி எழுந்துள்ளது. இஸ்ரேல் மீது நடந்த இந்த கொடிய தாக்குதலால், அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!