முதல்வர், அமைச்சர்களின் சொத்து விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியானது! பிற மாநிலங்கள் கடைப்பிடிக்குமா?

 
ஒடிசா முதல்வர்  பிஜு பட்நாயக்

ஓடிஷா முதல்வராக இருப்பவர் பிஜு ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக். இங்கு, மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொத்து மதிப்புகள், அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் சொத்து மதிப்பு, 2020 - 2021ம் நிதியாண்டின் படி ரூ.65.40 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா முதல்வர்  நவின் பட்நாயக்
இதில் அவரின் அசையும் சொத்துகளான நகை, வங்கிக் கணக்கு, கார் மதிப்பு ரூ.12.52 கோடி என்றும், அசையா சொத்துகள் நிலம், வீடு மதிப்பு ரூ.52.88 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாநில அமைச்சர்களான அசோக் சந்திர பாண்டா, ரானேந்திர பிரதாப் ஸ்வைன், பிரமிளா மாலிக், பிரித்தி ரஞ்சன் கடாய் உள்ளிட்ட 14 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளனர்.

சொத்து வரி
சுரங்கத்துறை அமைச்சர் பிரபுல்லா மாலிக், தனக்கு ரூ.44 லட்சம் மதிப்பு சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். சொத்து மதிப்பு குறைவாக உள்ள அமைச்சர் இவர் தான். நவீன் பட்நாயக்கின் அசையா சொத்துக்கள் அனைத்தும், தனது பெற்றோர் வழிவந்தவை என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அமைச்சர்களின் சொத்து விபரங்கள் குறித்து, பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த புள்ளி விவரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிற மாநிலங்களும் ஒடிசா மாநிலத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளுமா என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web