அதிர்ச்சி... ஓட்டப்பந்தயத்தில் மாரடைப்பு... 14 வயது மாணவன் சுருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்!

 
நாக்ஸ் மேக்ஈவன்

ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட 14வயது பள்ளி மாணவன், ஓடிக் கொண்டிருக்கும் போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பந்தய ஏற்பாட்டாளர்கள், போட்டியில் கலந்து கொண்டவர்கள் என மைதானத்தில் இருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்து, பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்த மாணவன் நாக்ஸ் மேக் ஈவன்(வயது 14). டேவிஸ் வெஸ்டர்ன் உயர்நிலை பள்ளியில் படித்து வந்த ஈவன், உடற்பயிற்சிக்காக ஒட்ட பந்தயம் உள்ளிட்டவற்றில் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில், 5 கி.மீ. தூர ஓட்ட பந்தய பயிற்சியை ஈவன் மேற்கொண்டபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளான். இதுபற்றி தகவல் அறிந்ததும் அவசரகால சிகிச்சை குழுவினர் உடனடியாக மாணவனுக்கு உதவ சென்றுள்ளனர்.

Florida 14-year-old boy Knox MacEwen dies while running a 5K race in Florida

இருப்பினும் ஈவனை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவத்திற்கு பள்ளியின் முதல்வர் ஜிம்மி அர்ரோஜோ இரங்கல் தெரிவித்து உள்ளார். ஈவன் அந்த பகுதியில் பரவலாக நன்மதிப்பை பெற்றிருப்பதுடன், தன்னார்வலராகவும் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. ஈவனின் இறுதி சடங்கிற்காக குடும்ப நண்பர் ஒருவர் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு, ரூ.55 லட்சம் சேர்த்துள்ளார்.

Florida 14-year-old boy Knox MacEwen dies while running a 5K race in Florida

அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன் கூடைப்பந்து விளையாட்டுக்கான பயிற்சியின்போது, காலிப் ஒயிட் (வயது 17) என்ற மாணவர் சரிந்து விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web