அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை!

 
கன மழை

மோக்கா புயல் நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில், தற்போது தமிழகத்தின் பல மாவட்டங்களில் புழுக்கமாக வெப்ப காற்று வீசி வருகிறது. காற்றில் உள்ள  ஈரப்பதத்தை மோக்கா இழுத்து செல்கின்ற நிலையில், நாளை மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 9 இடங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மோக்கா  புயலாக உருமாறி வலுப்பெற்றுள்ளது. இன்று வடக்கு திசையில் நகர்ந்து மிகத்தீவிர புயலாக மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 5.30 கிலோ மீட்டர் மேற்கு-வடமேற்கே நிலை கொண்டுள்ளது.

வெயில் , மழை

இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து  மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை மே 14ம் தேதி தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175  கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கக்கூடும். 

இதனையடுத்து இன்று முதல் மே 16ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். அதே நேரத்தில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் காரணமாக உடல் நலக் குறைபாடுகள்  ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். தென்மேற்கு வங்கக்கடல், தமிழக - இலங்கை கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகள் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் இதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஆழ் கடலிலுள்ள  மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web