மும்பையை புரட்டி போட்ட மழை... மழை நீரில் மிதக்கும் மக்கள்!

 
மழை

 தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் மும்பை புறநகர்ப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இன்று ஜூலை 8ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 7 மணி வரை 30 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.மும்பை, புனே, ரத்னகிரி, ராய்காட் அமராவதி மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் விடியவிடிய கனமழை கொட்டி தீர்த்ததால், அந்த பகுதிகளில் கடுமையான  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  

மழை

அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள், தாதர் உட்பட  பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  
மும்பை தானே பகுதியில்  கனமழை பெய்வதால் அங்கு பாதிப்புகள் அதிகமாக உள்ளது. இடைவிடாத மழையால் மழைநீர் கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன. நகரில் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

மழை
தானே புறநகர் ரயில் நிலையங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 5 ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பல வழித்தடங்களில் உள்ளூர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. ரயில் நிலையங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மும்பையில் பேருந்து சேவைகளும் முடங்கியுள்ளது. இதனால் பொது மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். மும்பையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  புனே, ரத்னகிரி, ராய்காட்  மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக மராத்வடா பகுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதேபோல் கேரளாவிலும் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web