கிங் மேக்கரின் உண்மை முகம்.. மாமனாரின் காலை வாரிவிட்டு கட்சியை அபகரித்த சந்திரபாபு நாயுடு!

 
 சந்திரபாபு நாயுடு

தற்போதைய நிலைக்கு கிங் மேக்கராக பார்க்கப்படும் சந்திரபாபு நாயுடுவின்  ‘உண்மையான’ முகம் என்ன என்பதை பார்ப்போம். 74 வயதிலும் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக திகழும் சந்திரபாபு நாயுடு, 1970-களில் கல்லூரிப் பருவத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அதுவும் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியின் தீவிர ஆதரவாளராக சந்திரபாபு நாயுடு  தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 

காங்கிரஸ் கட்சியில் படிப்படியாக முன்னேறிய சந்திரபாபு நாயுடு, 1978ல் எம்.எல்.ஏ.வானார் . 1980-82ல் அமைச்சரானார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆந்திராவில் புயலை கிளப்பிய 'புரட்சித் தலைவர்' என்.டி.ராமாராவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். 1984ல், என்டிஆர் ஆட்சியைக் கவிழ்க்க காங்கிரஸ் நடத்திய அரசியல் சதியை அற்புதமாக முறியடித்து, சந்திரபாபு நாயுடு, என்டிஆரின் நம்பிக்கையை  பெற்றார்.

 என்டிஆருக்கு 11 குழந்தைகள்.. 2 மனைவிகள்.. என்டிஆர் மருமகன் சந்திரபாபு நாயுடு ‘தெலுங்கு தேசம்’ கட்சிக்கு சொந்தக்காரர் ஆனது எப்படி? தெலுங்கு தேசம் கட்சியை கைப்பற்றினார்? 1990களில் அரசியலில் ஈடுபட்டவர்களிடம் கேட்டால் கதைக்கு கதை சொல்வார்கள்.  சந்திரபாபு நாயுடு, என்டிஆரின் 2வது மனைவி லட்சுமி பார்வதியை மையமாக வைத்து அனைத்து சகுனி விளையாட்டுகளையும் விளையாடினார். லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த மேடையில் லட்சுமி பார்வதியை உங்கள் முன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து மேடைக்கு அழைக்கிறார் என்டிஆர்.. லட்சுமி பார்வதியும் மேடைக்கு செல்கிறார்.. திடீரென கரண்ட் கட்.. கூட்டம் கூச்சல் போடுகிறது.. முன் வரிசையில் அமர்ந்திருந்த சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது ஆதரவாளர்களை காணவில்லை.. லட்சுமி பார்வதியை என்டிஆர் திருமணம் செய்தாரா? இல்லையா? என்பது புரியாத புதிராகவே இருந்தது..

கரண்ட் கட் செய்தவர் இந்த கிங் மேக்கர் சந்திரபாபு நாயுடு தான். என்டிஆர் முதுகில் குத்தி கட்சியை அவர் கைப்பற்றினார்.. என்டிஆர் 1990 களில் ஆந்திர தேசிய அரசியலின் உச்சத்தில் இருந்தார். அசைக்க முடியாத ஆளுமையாக இருந்த என்.டி.ஆரை முதுகில் குத்தி, முதல்வர் பதவியில் இருந்து விரட்டி, சட்டசபையில் சிங்கம் போல கர்ஜித்த புரட்சித் தலைவரை வைத்து 'அரசியல்' விளையாடிய வரலாறு சந்திரபாபு நாயுடு பக்கம் உள்ளது. மற்றும்  . 1995ல் என்டிஆர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது சந்திரபாபு நாயுடு விளையாடிய சூழ்நிலையை இப்போதும் நினைத்தால் குலை நடுங்கும்.  இத்தனை அவமானங்களையும், துயரங்களையும் நெஞ்சில் சுமந்து கொண்டு என்டிஆர் எவ்வளவு காலம் வாழ முடியும்? மாபெரும் தலைவர் என்டிஆர் 1996 இல் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

இதை இன்றைக்கு ஒட்டுமொத்த நாடும் மறந்து விட்டது.. இதை இன்றும் என்டிஆர் குடும்பத்தினரும், என்டிஆர் ஆதரவாளர்களும் மறக்கவில்லை.. சொந்த மாமனாரை முதுகில் குத்தி, தெலங்கானா கட்சியை குடும்ப சொத்தாக்கிய சந்திரபாபு நாயுடுவின் கையில் தான் இன்றைக்கு மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முடிவு உள்ளது. என்ன நிகழ்ப்போகிறது என்பதை காத்திருந்து பார்ப்போம்.

 காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web