தமிழகத்தில் பாஜக தோல்விக்கு காரணம் நயினார் நாகேந்திரன் பணம் கொடுக்காததே ... பரபரப்பு ஆடியோ!

 
பாஜக

 தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். ஆனால் வாக்குவங்கி உயர்ந்துள்ளது. அந்த வகையில் நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம் என பாஜக மாவட்ட தலைவர் பேசும்  ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி  மாவட்ட இந்து முன்னணி செயலாளர் உடையார், நெல்லை பாஜக மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

அதில், உடையார், தமிழகத்தின்  40 இடங்களில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாதது வேதனையாக உள்ளது.  அதற்கு காரணம் என்ன என கேள்வி கேட்கிறார்.  வினவுகிறார். அதற்கு பாஜக மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், “ நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகம் செய்யாததே  தோல்விக்கு காரணம் என கூறுகிறார். நயினார் நாகேந்திரன் கட்சிக்காரர்களிடம் பணத்தை கொடுக்காமல் அவர் தனது சொந்தக்காரர்களுக்கு மட்டும் பணத்தை கொடுத்து விட்டார்.


நயினார் நாகேந்திரன் பாஜகவினரை நம்பி பணம் கொடுக்காமல் மற்றவர்களிடம் பணம் கொடுத்ததே தேர்தல் தோல்விக்கு காரணம். நயினார் நாகேந்திரனின் உறவினர்கள், பாஜகவினரை மதிக்கவில்லை.எனக் குற்றமும் சாட்டியுள்ளார். இதனை கேட்டே உடையார், நயினார் நாகேந்திரன் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கட்சியை அழித்துவிட்டார். கலவரம் பண்ணாதான் தமிழகத்தில்  பாஜக காலூன்ற முடியும் எனக் கூறும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web