’என் சாவுக்கு காரணம்.. என் புருஷனும், கள்ளக்காதலனும் தான்’.. கடிதம் எழுதி தற்கொலை செய்துகொண்ட பெண்!

 
கள்ளக்காதல்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (42). பெயின்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயசாந்தி (41). வண்ணார்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவர் சரவணன் வெளிநாட்டில் பணிபுரிந்தபோது, ​​மணலி  புதுநகரில் உள்ள சகோதரியின் கணவரான மற்றொரு சரவணனுக்கு தனது சம்பளத்தை அனுப்பி வைத்தார். இவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். பணத்தை வாங்க விஜயசாந்தி சென்றபோது, ​​இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதல்

அதன்பின், வெளியூரில் இருந்து வந்த கணவர் சரவணன், மனைவி ஏமாற்றியது தெரிந்ததும், மனைவியை கண்டித்தது மட்டுமின்றி, அடித்து உதைத்துள்ளார். ஆனால் மறுபுறம், மெக்கானிக் சரவணன், விஜயசாந்தியிடம் தொடர்ந்து உறவில் இருக்கும்படி வற்புறுத்துகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் மனம் உடைந்தார் விஜயசாந்தி .

இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டின் படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயசாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயசாந்தி வீட்டில் சோதனையிட்டபோது ஒரு கடிதம் சிக்கியது. அதில், “என் சாவுக்கு  எனது கணவர் சரவணனும்,  உறவினர் சரவணனும்தான்  காரணம்” என்று எழுதியிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து விஜயசாந்தியின் கணவர் பெயிண்டர் சரவணன் மற்றும் அவரது உறவினர் மெக்கானிக் சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web