ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடர்கிறது... 10வது முறையாக மாற்றமில்லை!
ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை. வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவிகிதமாக தொடர்கிறது. இது பற்றிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று வெளியிட்டார்.

அதன்படி, ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாததால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெப்போ வட்டி விகிதம் கடந்த ஆண்டு மே மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையேயான கால கட்டத்தில் 250 அடிப்படை புள்ளிகள் உயர்ந்ததால் 6.5 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி தொடர்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி நீடிப்பது இது 10-வது முறையாகும்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
