சுடுகாடு செல்லும் பாதை அடைப்பு... இறந்தவர் உடலுடன் உறவினர்கள் போராட முயற்சி!

 
சுடுகாடு போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சுடுகாடு செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் இறந்தவர் உடலுடன் உறவினர்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் 150 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வதற்கு சுடுகாடுசொக்கலிங்கபுரம் மெய்யூர் செல்லும் பகுதியில் உள்ளது. இந்நிலையில் சுடுகாடு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட பாதையை அதே ஊரை சேர்ந்த தனிநபர் தங்களுடைய இடமென்று அடைத்து வைத்துள்ளார்.

சாத்தான்குளம்

இதனால் சொக்கலிங்கபுரத்தில் யார் இறந்தாலும் சுடுகாடு செல்ல பாதை அடைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட சுடுகாடு பாதை அடைக்கப்பட்டது என கிராம மக்கள் சார்பில் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வருவாய்த்துறையினர் வந்து அடைக்கப்பட்ட பாதையை திறந்து வைத்து சென்றுள்ளனர்.

ஆனால் தனிநபர் தன்னுடைய சொந்த இடம் என முள்வேலி அமைப்பு மீண்டும் அடைத்து வைத்துள்ளார். இதனால் கிராம மக்கள் மீண்டும் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். ஆனாலும் அடைக்கப்பட்ட பாதை திறக்கப்படாமல் இருந்துள்ளது சொக்கலிங்கபுரம் கிராம மக்கள் அந்தப் பாதையை திறக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரியை கண்டித்து கடந்த வாரம் கருப்புக்கொடி ஏந்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பள்ளி மானவி தற்கொலை

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் அதிகாரிகளுக்கு சுடுகாடு செல்லும் பாதை அடைக்கப்பட்டதை திறந்து வைக்க வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் சொக்கலிங்கபுரத்தில் மணி என்பவர் உடல்நல குறைவால் இன்று இறந்து போனார். இதனால் சுடுகாடு பாதையை திறக்க கோரி இறந்தவர் உடலை வைத்து சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக கிராம மக்கள் அறிவித்தனர்.

உடன் தகவல் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஸ்டெல்லா பாய், மெஞ்ஞானபுரம் உதவி ஆய்வாளர்கள் சண்முகராஜ், ஞானசேகர், கணேசன், உடன்குடி வருவாய் ஆய்வாளர் முனீஸ்வரி, வெங்கட்ராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் அமுதா, ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு செயலாளர் சித்திரை பாண்டி, தலைவர் சுரேஷ் ராஜா, சாத்தான்குளம் ஒன்றிய பாஜக தலைவர் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் ஆனந்த், இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் விபி ஜெயக்குமார் உள்ளிட்ட கிராம மக்கள் பலர் பங்கேற்றனர். அப்போது சுடுகாடு பாதையை அடைத்து வைத்த நில உரிமையாளரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதில் அவர்கள் அவர்களுடைய இடத்தில் வேறு இடத்தில் சுடுகாடு செல்ல பாதை ஏற்படுத்தி கொடுத்தனர். அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள், அடைக்கப்பட்ட பாதையை திறந்து அந்த வழியாகத்தான் சுடுகாடு சொல்லுவோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அடைக்கப்பட்ட பகுதியை உடைத்து இறந்தவர் உடலை சுடுகாட்டு பகுதியை கொண்டு சென்றனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது உடன் போலீசார், அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?