பகீர்... வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து கிராம நிர்வாக அலுவலர் படுகாயம்... !!

 
மேற்கூரை

தென்காசி மாவட்டம், மேலக் கடையநல்லூரில் அருள்மொழிக்கு  சொந்தமான பழமையான 2 வீடுகள் உள்ளன. இந்த வீட்டில் அதே பகுதியில் வசித்து வருகிறார் மாரியப்பன். அவர்   கூலித் தொழிலாளியாக பணிபுரிந்தார்.  நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன்  வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். நேற்று அதிகாலையில் வீட்டின் கூரையில் இருந்து மழை நீர் ஒழுகிக் கொண்டு இருந்தது.

ஆம்புலன்ஸ்

மாரியப்பனின் மனைவி மாடத்தி, மகன்கள் ராமர், இசக்கி மணிகண்டன், மகள் மதுமிதா ஆகியோர் திண்ணையில் படுத்திருந்தனர். மாரியப்பன் மட்டும் வீட்டுக்குள் படுத்து தூங்கியுள்ளார். அப்போது, வீட்டின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் மாரியப்பன் படுகாயம் அடைந்தார்.  இது குறித்து  தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போலீஸ்

மாரியப்பனை மீட்டு, அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கடைய நல்லூர் காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மாரியப்பனின் குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கடையநல்லூர் வட்டம், மலையடிக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடத்தின் கூரை தொடர் மழையால் நனைந்தது.  இதில் கிராம நிர்வாக அலுவலருக்கு லேசான படுகாயம் ஏற்பட்டது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web