நள்ளிரவில் சோகம்... வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி!

 
இடிந்த வீடு
 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்துபட்டி தெருவில் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது  நாச்சியார்  எனும் 85 வயது மதிப்புடைய மூதாட்டின் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு மடத்துப்பட்டி தெருவை சேர்ந்த வள்ளிநாயகம் என்பவரது  மனைவி நாச்சியார்(85). வள்ளிநாயகம் உயிர் இழந்த நிலையில் நாச்சியார் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

நாச்சியார்

நேற்று இரவு 10:30 மணி அளவில் நாச்சியார் அருகே வசிப்பவர்களிடம் பேசிவிட்டு, வீட்டிற்கு தூங்கச் சென்றார். இன்று காலை அக்கம்பக்கத்தினர் எழுந்து பார்த்தபோது நாச்சியார் வீட்டின் மேற்கூரை இடிந்து கிடந்தது. உள்ளே இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் நாச்சியார் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.  

ஆம்புலன்ஸ்

ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கி இருந்த நாச்ச்சியாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web