அம்...மாடியோவ்... சென்னையில் 14 ஏக்கரில் அரண்மனையில் வாழும் ராஜ குடும்பம்!
ஆங்கிலேயர்கள் காலத்தில் சென்னையை தலைமையாக கொண்டு தான் தமிழகத்தை ஆண்டு வந்தனர். அக்காலத்தில் சென்னையை மெட்ராஸ் , மதராசப்பட்டணம் என அழைத்தனர். அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த மன்னர்கள் குறித்தும் அவர்களின் வம்சாவளி வாரிசுகள் நிலை குறித்தும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ராஜவம்சத்தினர் இப்போதும் சென்னை ராயப்பேட்டையில் சுமார் 14 ஏக்கரில் ஒரு பெரிய அரண்மனையில் வசித்து வருகின்றனர்.

இந்த அரண்மனையில் தான் அந்த காலம் முதல் மன்னர் வம்சாவளியினர் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆற்காடு நவாப் ஆட்சி செய்தபோது சென்னையில் பல இடங்கள் அவர் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அப்போது மன்னர்கள் சென்னை கடற்கரை அருகில் அமைந்துள்ள சேப்பாக்கத்தில் 1268 முதல் 1855 ம் ஆண்டு வரை காலகட்டத்தில் வாழ்ந்து வந்தனர். 1855 ம் வருடம் ஆங்கிலேயர்களின் வாரிசு சிறப்பு கொள்கையின் காரணமாக ஆற்காடு நவாப் ஆங்கிலேயர் ஆட்சிக்கு சென்றது .
அந்த சமயத்தில் “ஹாதி மஹால்” என்ற சிறிய இடத்தில் இவர்கள் வாழ்ந்து வந்தனர்.

ஆங்கிலேயருடன் செய்து கொண்ட உடன்படிக்கை படி ராயப்பேட்டையில் இருக்கும் அமீர் மஹால் என்ற பெரிய அரண்மனையை ஆற்காடு நவாப்பிற்கு ஆங்கிலேயர்கள் அளித்தனர். அன்று முதல் இன்று வரை நவாப் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக அதே இடத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர். தற்போது முகமது அப்துல் அலி நவாப் என்பவர் ஆற்காடு நவாப்பின் மன்னராக இருந்து வருகிறார். இவர்களுடைய ஆரம்ப காலத்தில் வாழ்ந்து வந்த சேப்பாக்கம் அரண்மனை அரசுடமையாக்கப்பட்டு தற்பொழுது அரசு அலுவலகம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
