வயலுக்குள் பாய்ந்த பள்ளிப் பேருந்து... அதிர்ஷ்டவசமாக தப்பிய மாணவ, மாணவிகள்!

 
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே பள்ளிப் பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 40 மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார்குடியிருப்பு பகுதியில் தனியார் பள்ளி செயல்படுகிறது. நேற்று மாலையில் பள்ளி முடிந்தவுடன், 40 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிப் பேருந்து ஏரலை நோக்கி சென்று கொண்டிருந்தது. குரும்பூர் அடுத்துள்ள பாலத்தில் சென்றபோது, எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மீது மோதாமல் இருப்பதற்காக, டிரைவர் பள்ளிப் பேருந்தை பக்கவாட்டில் திருப்பி உள்ளார்.

இதில் நிலைதடுமாறிய அந்த பேருந்து அருகிலுள்ள வயலுக்குள் பாய்ந்து விபத்துக்கு உள்ளானது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். உடனடியாக அந்த வழியாக சென்றவர்களும், அக்கம் பக்கத்தினரும் ஓடிசென்று பேருந்தில் இருந்த மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக மீட்டனர். 

உத்தரபிரதேச போலீஸ்

இதில் பேருந்தில் இருந்த 40 மாணவ, மாணவிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள், குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web