திருச்செந்தூரில் கடல் 80 அடி தூரம் உள்வாங்கியது!

 
திருச்செந்தூர் கடல்

நேற்று பெளர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூரில் கடல்நீர் 80 அடி தூரம் உள்வாங்கியது. பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடினர்.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் அடிக்கடி கடல்நீர் உள்வாங்குவது வழக்கம். 

திருச்செந்தூர் கடல்

அதாவது, ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம், மறுநாள் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. நேற்று முழுவதும் பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடல் நீரானது சுமார் 80 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்பட்டது. இது இரவு வரை நீடித்தது.

 திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு

இதனால் கடலில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. கடல் உள்வாங்கினாலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பாசி படர்ந்த பாறைகள் மீது ஏறி நின்று ‘செல்பி’ எடுத்தும் மகிழ்ந்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது? யற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?