இந்தியா முழுவதும் ஜூன் 14 வரை இந்த சேவை முற்றிலும் இலவசம்... மறக்காம மாத்திடுங்க!

 
ஆதார்

இந்தியா முழுவதும்  நாளை மறுதினம் ஜூன் 14ம் தேதி வரை ஆதார் அட்டையில் திருத்தங்களை இலவசமாக இணையதளத்தில் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையைப் பயன்படுத்திக்கோங்க. வங்கி கணக்கு எண் தொடங்குவதில் இருந்து சொத்து வாங்குவது, பொருள் வாங்குவது, அரசின் சேவைகளை பெற என அனைத்திற்கும் ஆதார் எண் அவசியமாகிறது. ஆதாரை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டியதும்  கட்டாயமே. அந்த வகையில் தற்போது இலவச புதுப்பித்தல் சேவையை அறிவித்துள்ளது.இந்த அரிய வாய்ப்பை இந்திய குடிமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமகனின் தனிநபர் அடையாள அட்டை ஆதார். இதனை இந்திய குடிமக்கள் தனித்துவமான அடையாள சான்றாக பயன்படுத்திக் கொள்ளலாம்  .

ஓய்வூதியம் பெற ஆதார் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

இதில் முகவரி, பெயர், திருத்தங்கள் இருந்தால் ஜூன் 14 வரை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. சாதாரணமாக  ஆதாரை புதுப்பிக்க ரூ .50 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஜூன் 14 வரை, அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்துக் கொள்ளலாம் என   அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் ஆகியவற்றைப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஜூன் 14 வரை மட்டுமே இந்த சேவை இலவசமாக வழங்கப்படும் அதன் பிறகு  எப்போதும் போல கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதே நேரத்தில்  புகைப்படம், கருவிழி அல்லது பிற பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க வேண்டுமானால், ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று புதுப்பித்தலுக்குத் தேவையான கட்டணத்தைச் செலுத்த வேண்டியது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“மழை, வெயிலால் பாதிக்கப்படாத புதிய பிளாஸ்டிக் ஆதார் கார்டு?!” ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி!!

ஆதார் நிர்வாகக் குழுவான UIDAI மக்கள் தங்கள் ஆதார் விவரங்களை ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் புதுப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இது தவிர, குழந்தைகளின் ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் இப்போது அமல்படுத்தியுள்ளது.

ஆணையின்படி, குழந்தைக்கு 15 வயதாகும்போது அனைத்து பயோமெட்ரிக்ஸ் விவரங்களையும் புதுப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை குறித்த ஆவணங்களில் எந்த தவறும் இல்லாமல் சரியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதன் மூலம் ஆதார் குறித்த ஆவணங்களை சரி செய்து கொள்ள அரிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் மற்ற விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கலாம், பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க ஆதார் பதிவு மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 

From around the web