மாமியார் தலையில் கல்லை போட்டுக் கொலை செய்த மருமகன்… பயங்கரம்!

 
சசிகலா

 சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் 65 வயது  வேணுகோபால். இவருடைய மனைவி 60 வயது  சிவபூஷணம். இவர்களுக்கு 3 ஆண் மகன்கள், ஒரு பெண் சசிகலா.  மகள் சசிகலா 10 வருடங்களுக்கு முன்பே ராமகிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராமகிருஷ்ணன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு அவருடைய தம்பியுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

ஆம்புலன்ஸ்

வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு இருந்த ராமகிருஷ்ணன், மாமியார் சிவபூஷணத்திற்கு வரும் பென்ஷன் பணத்தை வாங்கி போதைக்கு அடிமையாகி தினமும் மதுபானம் அருந்தி வந்தார்.   சம்பவத்தன்று குடிக்க பணம் கேட்டு தராததால் அவருடைய தலையில் கல்லை போட்டு ராமகிருஷ்ணன் கொலை செய்துவிட்டார். அக்கம்பக்கத்தினர் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ்

இதன் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து  ராமகிருஷ்ணனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மாமியாரை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web