இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன் தேர்தலில் வெற்றி!

 
சரப்ஜீத் சிங் கல்சா

 பஞ்சாபில்  சீக்கிய மதப் போதகா் அமிா்த்பால் சிங் மற்றும் , முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி கொலையாளியின் மகன் சரப்ஜித் சிங் கல்சா   இருவரும் சுயேச்சைகளாக போட்டியிட்டு முதல்முறையாக நாடாளுமன்ற எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பின் தலைவரான அமிா்த்பால் சிங், தீவிர சீக்கிய மதப் போதகா் ஆவாா். இவர் கடந்த ஆண்டு தேச பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  தற்போது அஸ்ஸாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.   சிறையிலிருந்தபடியே பஞ்சாப், கதூா் சாஹிப் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு  4,04,430 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.    

சரப்ஜீத் சிங் கல்சா

இத்தோ்தல் வெற்றிக்கு ‘சங்கத்’ சமூக மக்களுக்கும் இறைவனுக்கும் நன்றி கூறுவதாக அவரது தந்தை தா்செம் சிங் தெரிவித்துள்ளார்.    தோ்தலில் போட்டியிடும் எண்ணமே இல்லாமல் இருந்ததாக  அமிா்த்பால் சிங்  கூறியுள்ளார். மக்களின் வற்புறுத்தலிலேயே போட்டியிட்டு தற்போது வெற்றி பெற்று இருப்பதாக கூறியுள்ளார்.  பஞ்சாபின் முக்கிய பிராந்திய கட்சியான சிரோமணி அகாலி தளம் இவருக்கு ஆதரவளித்தது  சரப்ஜித் சிங் கல்சா  ஆம் ஆத்மி வேட்பாளரை 70,053 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இவா் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியைக் கொன்ற 2 சீக்கிய பாதுகாவலா்களில் ஒருவரான பியந்த் சிங்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 13 தொகுதிகள் கொண்ட பஞ்சாபில் காங்கிரஸ் 7, ஆம் ஆத்மி 3 இடங்களிலும் சிரோமணி அகாலி தளம் ஓா் இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.   

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web