முதல்வர் நிகழ்ச்சி மேடை தீவைத்து எரிப்பு.. தொடரும் பதற்றம்.. 144 தடை, மொபைல் இணைய சேவை கட்!

 
 மணிப்பூரிர்

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் முதலமைச்சர் பிரேன் சிங் இன்று (வெள்ளிக்கிழமை) ஜிம் மற்றும் விளையாட்டு அரங்கை திறந்து வைக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தை மர்ம நபர்கள் தீவைத்து கொளுத்தினர். இதனால் விழா மேடை, நாற்காலிகள் உள்பட அனைத்தும் எரிந்து நாசமானது.

தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மேலும் முதலமைச்சரின் கட்சி தொண்டர்களும் அங்கு திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து சுராசந்த்பூர், பெர்சாவல் மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

 மணிப்பூரிர்

இது தொடர்பாக மாநில உள்துறை ஆணையர் எச்.ஞானபிரகாஷ் வெளியிட்ட உத்தரவில், சமூகங்களின் முழு அமைதியான சகவாழ்வுக்கும், பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்கும் நிலைமை கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும். சுராசந்த்பூர் மற்றும் பெர்சாவல் மாவட்டத்தின் பிராந்திய அதிகார வரம்பில் மொபைல் டேட்டா சேவைகளை இடைநிறுத்த / கட்டுப்படுத்த இதன் மூலம் உத்தரவிடுகிறேன்,  என்று கூறியுள்ளார்.

மாநில அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுராசந்த்பூரில் இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை முழு அடைப்புப் போராட்டத்திற்கு பழங்குடித் தலைவர்கள் மன்றம் (ITLF) அழைப்பு விடுத்த சில மணிநேரங்களில் இந்த தீவைப்பு சம்பவம் நடந்தது.

 மணிப்பூரிர்

முன்னதாக அந்த அமைப்பு மணிப்பூர் அரசுக்கு பல கோரிக்கைகளை முன்வைத்தது. பாதுகாக்கப்பட்ட காடுகளில் வனவிலங்குகள் மற்றும் கிராமங்களை வெளியேற்றுவது தொடர்பான எங்கள் குறைகள் மற்றும் அச்சங்களை அரசு விவாதிக்க வேண்டும். அரசாங்கம் தேவாலயங்களை இடித்தது எங்கள் உணர்வுகளை வேதனைப்படுத்தியது மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களுக்கு ஆழமான புனிதமான ஒன்றைக் கருத்தில் கொள்ளவில்லை, என்று ITLF ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web