வர்த்தகம் துவங்கியது முதலே பங்குச்சந்தை கடும் சரிவு!

 
பங்குச்சந்தை

இன்று காலை 8 மணிக்கு மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

தபால் வாக்குப்பதிவுகளில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து நிலையான ஊகத்திற்கு வர முடியாததால், தேசிய பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் துவங்கியது முதலே கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

இறக்கத்துடன் துவங்கிய இன்றைய பங்குச்சந்தை சென்செக்ஸில் 2303.45 புள்ளிகளை இழந்து 74275.46- இறக்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல், நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து 22633.12-ல் தடுமாறி வருகிறது. (9.40 நிலவரப்படி)

மேலும், இன்றைய பங்குச்சந்தை முடிவில் 3000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web