அதிர்ச்சி... பள்ளி வளாகத்தில் மாணவன் சரிந்துவிழுந்து பலி... கதறித் துடித்த பெற்றோர்..!!

 
மாரிமுத்து

சமீபகாலமாக மிகச்சிறு வயதிலேயே திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.  பள்ளி மாணவன் மயங்கி விழுந்து பலி, கல்லூரி மாணவி பலி நடனம் ஆடிய போது பலி , உடற்பயிற்சி செய்யும் போது பலி மணமேடையில் சரிந்து விழுந்து பலி என அதிர்ச்சி மரணங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் திடீரென மயங்கி சரிந்து பலியாவது பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு முறை மாறி வரும் வாழ்க்கை முறை  , உடற்பயிற்சியின்மை என என்னதான் காரணங்கள் கூறினாலும் வாழவேண்டிய சின்னஞ்சிறு வயதில் திடீர் மரணங்கள் காண்பவர்களை கலங்கடித்து வருகிறது.

மாரிமுத்து

அந்த வகையில் நேற்று நவம்பர் 14ம் தேதி இந்தியா முழுவதுமே குழந்தைகள் தினம் பள்ளிகள், அரசு விழாக்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டன. குதூகலத்துடன் குழந்தைகள் சுற்றி திரிந்த நிலையில்பள்ளி வளாகத்தில் மாணவன்  ஒருவன் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மாணவர் ஒருவர் பள்ளியிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெருங்காடு உயர்நிலைப் பள்ளியில் மாரிமுத்து 9ம் வகுப்பு மாணவர். இவர் நேற்று பள்ளி நேரம் முடிந்ததும்   தன்னுடைய சக நண்பருடன் பேசியபடியே பள்ளி வளாகத்தில்  நடந்து சென்று கொண்டிருந்தார்.

ஆம்புலன்ஸ்

அப்போது, திடீரென மயங்கி விழுந்த அவர், அங்கேயே உயிரிழந்தார். மரணத்திற்கான காரணம் என்ன என்பது இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. இவரது மரணம் குறித்து கேள்விப்பட்டு பள்ளிக்கு வந்த பெற்றோர் கதறிதுடித்த காட்சி காண்பவர்கள் கண்களில் நீரை வரவழைத்தது. சக மாணவ மாணவிகள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.  இந்நிலையில் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மாணவனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web