குடிபோதையில் இருந்த மாணவர்.. கல்லூரிக்குள் அனுமதிக்காததால் காவலரை கொன்ற கொடூரம்.. அதிர்ச்சி பின்னணி!

 
ஜெய் கிஷோர் ராய்

கர்நாடக மாநிலம் பெங்களூரு அம்ருதஹள்ளியில் சிந்தி என்ற தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்குள்ள துப்புரவு பணியாளர் பிரிவில் ஜெய் கிஷோர் ராய் (47) என்பவர் மேலாளராக இருந்தார். இந்நிலையில், கல்லூரி வார்டன் பிரிவு மேலாளர் இல்லாததால் ஜெய் கிஷோர் ராய்க்கு வார்டன் பிரிவு மேலாளர் என கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. சம்பவத்தன்று ஜெய் கிஷோர் ராய் கல்லூரி நுழைவு வாயிலில் பணியில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த பிஏ ஆங்கில இரண்டாம் ஆண்டு மாணவர் பார்கவ் (22) குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் அவரை கல்லூரியில் சேர்க்க ஜெய் கிஷோர் மறுத்துவிட்டார். இந்நிலையில், அவரிடம் வாக்குவாதம் செய்த பார்கவ், அருகில் இருந்த கடையில் கத்தியை வாங்கி ஜெய் கிஷோர் ராயின் மார்பில் குத்தினார்.

தற்கொலை

இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த அம்ருதஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் பார்கவை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web