நெகிழ்ச்சி... ப்ளீஸ் ... போகாதீங்க சார்... பணிமாறுதலான ஆசிரியரின் கால்களை பிடித்து கதறிய மாணவிகள்!

 
ஆசிரியர் மாணவிகள்


அரசுப் பள்ளிகளில்  கல்வித்தரம் குறித்து பெருவாரியான மக்களுக்கு திருப்தியில்லை. ஆனால் அங்கும் நேர்மையான ஆசிரியர்கள் அக்கறையுடனும், ஆர்வத்துடனும் மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். எங்கோ ஏதோ ஒரு சம்பவம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.  தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள(எம்) பொலுமல்லா ஜில்லா பரிஷத் அரசுப்பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக பணிபுரிந்து  வந்தவர் சைதலு. இவர் தன்னிடம் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் அதிக அன்பும், அக்கறையும் காட்டி வழிநடத்தி வந்துள்ளார். இவருக்கு வேறு பள்ளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி மாறுதல் ஆணை வந்தது. இதனையடுத்து அந்த ஆசிரியர்  மாணவர்களுக்கு சாக்லேட் கொடுத்து வாழ்த்து தெரிவித்து விடைபெற முயன்றார்.

வகுப்பறைகள்

ஆனால் மாணவர்கள் கதறி அழுதனர்.  மாணவ, மாணவிகள் ஆசிரியரின் காலில் விழுந்து, `சார், இதேபள்ளியில் பணிபுரியுங்கள், எங்கும் போகவேண்டாம் ப்ளீஸ் சார்…’ என துடித்தனர்.  ஒரு கட்டத்தில் மாணவர்கள் ஆசிரியரை போகவிடாமல் அரண்போல் நின்றுகொண்டனர். இதைக்கண்ட அந்த ஆசிரியரும் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார்.

இனி என்னாகுமோ மாணவர்களின் எதிர்காலம்! ஏங்கிக் கிடக்கும் வகுப்பறைகள்!


ஒருவழியாக அவர்களை சமாளித்து தனது பைக்கை எடுக்க முயற்சித்தார். மாணவர்கள் பைக்கை எடுக்க விடவேஇல்லை.  அந்த ஆசிரியர் இது குறித்து மாணவ மாணவிகளிடம் , `ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பல குருக்கள் வருவார்கள். அவர்கள் சொல்லிதரும் பாடத்தை கவனித்து உயர் இலக்கை அடைய வேண்டும். என்னைவிட இன்னும் சிறப்பான ஆசிரியர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். எனவே என்னை போகவிடுங்கள், யாரும் அழவேண்டாம்’ என அறிவுரை கூறிச் சென்றார். இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web