பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்... திரையுலகில் பெரும் சோகம்!

 
பல்லா


பஞ்சாபி திரையுலகில் வசித்து வருபவர்  பிரபல காமெடி நடிகர்  ஜஸ்விந்தர் பல்லா. இவர், தனது 65வது வயதில் காலமானார். மொஹாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பல்லா, வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலோங்கி பகுதியில் சனிக்கிழமை அன்று அவரது உடலுக்கான இறுதி சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  பஞ்சாபி திரையுலகைச் சேர்ந்த பலரும் பல்லாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

ஜஸ்விந்தர் பல்லா கடந்த 30 ஆண்டுகளாக நீடித்த தனது திரை வாழ்க்கையில் பல்வேறு வகையான பஞ்சாபி படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து  புகழ் பெற்று விளங்கினார். துல்ஹா பட்டி போன்ற பிரபலமான நகைச்சுவைப் படத்தில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் ஜஸ்பால் பட்டி இயக்கிய இந்தி மொழி நகைச்சுவைத் திரைப்படமான மஹௌல் தீக் ஹை  மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஜாட் அண்ட் ஜூலியட், சர்தார் ஜி மற்றும் கேரி ஆன் ஜட்டா போன்ற மிகப்பெரிய பஞ்சாபி வெற்றிப் படங்களில்  நடித்துள்ளார். 

கேரி ஆன் ஜட்டா என்ற 3 படங்களில் அட்வகேட் தில்லானாக அவர் நடித்தது அவருக்கு ஒரு அடையாள பெயராக மாறியது. அவர் தனது கதாபாத்திரங்களுக்கு வெவ்வேறு கவர்ச்சிகரமான சொற்றொடர்களைப் பயன்படுத்தி தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார். சிறிய பாத்திரங்களைக் கூட பார்வையாளர்களுக்கு மறக்கமுடியாததாக மாற்றுவதில் வல்லராக அறியப்பட்டார். கடைசியாக  2024ம் ஆண்டு வெளியான ஷிண்டா ஷிண்டா நோ பாப்பா படத்தில் பல்லா நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜஸ்விந்தர் பல்லா சண்டிகரில் நுண்கலை ஆசிரியரான பரம்தீப்பை மணந்தார். அவர்களின் மகன் புக்ராஜ் பல்லாவும் ஒரு நடிகர். ஆரம்பத்தில் ஒரு பொறியாளராக பணியில் இருந்த புக்ராஜ் தனது தந்தையின் வழியை பின்பற்றி, 2000களில் முதன்முதலில் இசை வீடியோக்களில் தோன்றினார்.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?