தக்காளி விலை கிடுகிடு உயர்வு.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
தமிழகம் முழுவதும் பரவலாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ததால் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம் அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 15க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ. 60க்கு விற்பனையாகிறது.

சின்ன வெங்காயம், சவ் சவ் விலையும் கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளன. திண்டுக்கல் மாவட்டத்திலும் தொடர் மழை காரணமாக ரூ15 க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி ரூ50க்கு விலை உயர்ந்துள்ளது.கோயம்பேடு சந்தைக்கு தினமும் தக்காளி 100 டன் வரத்து இருக்கும். இன்றைய நிலவரப்படி சந்தைக்கு 2 டன் தக்காளியே வந்துள்ளது; மழையால் தக்காளிகள் செடியிலேயே சேதமடைந்து விடைவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த திடீர் விலை உயர்வு இல்லத்தரசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
