டீ கொடுத்து காதலை வளர்த்த டீ மாஸ்டர்.. இடையூறாக இருந்த கணவனை பிளான் போட்டு தூக்கிய 2வது மனைவி!

 
செல்வி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அவுட்டர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (54). காஜா கடை உரிமையாளர். இவருக்கு கார்த்திகாமணி (48), செல்வி (35) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் கார்த்திகாமணி தனது கணவர் சரவணனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். சரவணன், செல்வி தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், முதல் மனைவியை வெளியூர் பகுதியில் வைத்துவிட்டு, இரண்டாவது மனைவி செல்வியை அதே வீட்டில் பெரிய கடை வீதி அருகே உள்ள சுங்கச்சாவடி தெருவில் காஜா பட்டன் தையல் கடை வைத்து கொடுத்து அங்கையே இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் முதல் மனைவி கார்த்திகாமணியிடம்  இரண்டாவது மனைவி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. கணவர் சாப்பிட வீட்டுக்கு வராததால், முதல் மனைவி போனில் தொடர்பு கொள்ள முயன்றும் கிடைக்கவில்லை. இதனால் கணவரை பார்க்க நேராக சுங்கச்சாவடிக்கு வந்தபோது வீடு பூட்டி இருந்தது.

அக்கம்பக்கத்தினரிடம் கூறி, வீட்டை திறந்து பார்த்தபோது, சரவணன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நத்தம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திலிருந்து சரவணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சரவணனின் 2வது மனைவி செல்வி சுங்கச்சாவடி வீட்டில் இல்லாதது தெரிய வந்ததையடுத்து, நத்தத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் இருந்து செல்வியை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது வீட்டின் அருகே டீக்கடை நடத்தி வந்த சலீம் மற்றும் செல்வி இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், இதற்கு இடையூறாக இருந்த சரவணனை சலீமும், செல்வியும் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து செல்வி, சலீம் ஆகிய இருவரையும் கைது செய்து நத்தம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சரவணன் மனைவிக்கு காஜா கடை கொடுத்துள்ளார். கடையின் அருகே டீக்கடை வைத்துள்ள சலீம், கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினமும் டீ கொண்டுவந்து கொடுப்பார்.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறவே, கணவர் சரவணன் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் சமயம் பார்த்து கணவரை தீர்த்து கட்டியது விசாரணையில் அம்பலமானது.

 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web