பள்ளி நேரத்தில் ஆசிரியர் கள்ளக்காதலியுடன் உல்லாசம்... மரத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்!
பள்ளி மாணவர்களுக்கு நல்ல வழியில் பாடம் கற்பித்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டியவர்கள் ஆசிரியர்கள். ஆனால் அவர்களே சில நேரங்களில் மனப்பிறழ்வு அடைந்து தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானாவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி நேரத்தில் திருமணம் ஆன பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்துக் கொண்டார். இதனை அறிந்த கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் அஸ்வரப்பேட்டை மண்டலம் நெமலிபேட்டை பழங்குடியினர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் லவுடியா ராமதாஸ். பள்ளிக்கு வரக்கூடிய ராமதாஸ் அதே ஊரில் வசித்து வரும் திருமணமான பெண்ணுடன் பழக்கம் வைத்துக் கொண்டார். இது நாளடைவில் தகாத உறவாக மாறத் தொடங்கியது.

பள்ளி நேரத்தில் அந்த பெண்ணுடன் ராமதாஸ் இருப்பதை அறிந்த கிராம மக்கள் ராமதாசை பள்ளியில் இருந்து இழுத்து வந்து கிராமம் மத்தியில் மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் கிராமத்திற்கு சென்று ஆசிரியர் ராமதாசை மீட்டு அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பாடம் சொல்லித்தர வேண்டிய ஆசிரியர் இவ்வாறு நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆசிரியரை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
