டீச்சர் அடிச்சிட்டாங்க .... போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் மின்னாம்பட்டி கிராமத்திலிருந்து 30 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இப்பள்ளிக்கு வருகை தரும் சூழலில், பேருந்து வசதி தடைபட்டதால் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு மாணவ மாணவிகள் தாமதமாக வரும் சூழல் உருவானது.
தினசரி பள்ளிக்கு தாமதமாக வரும் இந்த மாணவ, மாணவிகளை தற்காலிக ஆசிரியை நிறைமதி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்று மாணவ, மாணவிகள் பள்ளி செல்ல மறுத்து கிராமத்தில் உள்ள சாவடி பகுதியில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்படி மாணவ மாணவிகளிடமும், ஆசிரியர்களிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில் பேருந்து வசதி தடைபட்டது அறியாமல் ஆசிரியை கண்டித்தாகவும், அவர் மன்னிப்பு கோரியதோடு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் பேருந்து வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மாணவ மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!