மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர்... பல் உடைந்து மயங்கி விழுந்து விபரீதம்!

 
வகுப்பறை
 

உத்திரப்பிரதேசம் மாநிலம் ரெபரேலியில்  தனியார் பள்ளியில்  கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். இந்நிலையில்  செவ்வாய்க்கிழமை 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் முகமது ஆசிப் கோடை விடுமுறையில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடம் குறித்து மாணவர்களிடம் கேட்டிருந்தார்.

ஆம்புலன்ஸ்

 அதற்கு வகுப்பில் உள்ள ஒரு மாணவன் சில தனிப்பட்ட பிரச்சனைகளால் வீட்டுப்பாடத்தை முடிக்கவில்லை எனக் கூறியதால் கோபம் அடைந்த ஆசிரியர் அந்த மாணவனை பிரம்பால் அடித்துள்ளார்.அதில் அந்த மாணவன் மயங்கி கீழே விழுந்தார். இந்நிலையில் மாணவனின் வாய் மற்றும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.

போலீஸ்

அது மட்டுமின்றி  மாணவனின் பல் உடைந்தது. மாணவன் மயங்கி கீழே விழுந்ததும் ஆசிரியர் முகமது அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இச்சம்பவம் பற்றி வகுப்பறையில் இருந்த மாணவர்கள் தலைமை ஆசிரியருக்கு தெரிவித்த நிலையில் பிறகு மாணவனை மீட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மாணவன் இருக்கும் நிலையில்  போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. தலைமறைவான ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web