கள்ளக்காதலனுடன் ஓடிய ஆசிரியை... காவல் நிலையத்தில் கதறிய காதல் கணவன்!

 
நதியா

திருச்சியில், கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய ஆசிரியை நதியா, கள்ளக்காதலனுடன் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வரும் நிலையில், காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவருக்கு, தன்னைத் தேட வேண்டாம் என்று வாட்ஸ்-அப் மூலமாக மெசேஜ் அனுப்பி உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் கணவர் புகாரளித்துள்ளார். 

திருச்சி, துறையூருக்கு அருகே கோம்பைபுதூரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் நதியா எனும் பெண்ணைக் காதலித்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். நர்சிங் பயிற்சி முடித்துள்ள நதியா, கோம்பைபுதூரில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

இன்ஸ்டா

இந்நிலையில் நதியா அதிக நேரம் செல்போனில் பொழுதைக் கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் இன்ஸ்டாகிராம்  மூலமாக விழுப்புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபருடன் நதியாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் இவர்களது இன்ஸ்டாகிராம் நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக திடீரென நதியாவை காணவில்லை. இதனால் நதியாவை அவரது காதல் கணவர் உள்பட உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது கணவர் புஷ்பராஜ் செல்போனுக்கு நதியாவின் செல்போன் எண்ணில் இருந்து வாட்ஸ்-அப் மூலம் குறும் செய்தி ஒன்று வந்துள்ளது. தான் பிராகாஷூடன் சென்னை செல்வதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் தகவல் இருந்தது.

திருமணம்
 கணவர் அதனை துறையூர் காவல் நிலையத்தில் கொடுத்து புகார் அளித்துள்ளார்.  புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓடிய அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியை நதியாவை, அவரது தொலைபேசி  எண்ணைக் வைத்து தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்த பள்ளி ஆசிரியை வேறொரு நபருடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web