சாதிப்பெயரை சொல்லி அடித்த ஆசிரியர்.. கதறும் பள்ளி மாணவர்.. தீவிர விசாரணையில் போலீசார்!

 
குத்தாலம் மாணவர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவை சேர்ந்த மாணவர் ஒருவர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு கணினி அறிவியல் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 12ஆம் வகுப்புக்கான சிறப்பு வகுப்பு நடைபெற்றது. பள்ளியில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால், மாணவர்கள் வெளியில் சிறுநீர் கழிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர் ஒருவர் சிறுநீர் கழிப்பதற்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன், மாணவரை அழைத்து எங்கே போகிறாய் என்று கேட்டார். சிறுநீர் கழிக்க வெளியே செல்வதாக மாணவர் கூறினார்.

பள்ளியில் உள்ள கழிவறையை பயன்படுத்துமாறு கூறிய ஆசிரியர் மூங்கில் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வகுப்பறைக்கு செல்லாமல், விளையாட்டு மைதானத்திற்கு சென்ற மாணவன்,  கால்பந்து விளையாட்டை வேடிக்கை பார்த்ததாகவும், அப்போது அங்கிருந்த ஆசிரியர் சீனிவாசன், மாணவனை அறைக்கு அழைத்து சென்று, ஏன் வகுப்பறைக்கு செல்லவில்லை என கேட்டு மூங்கில் கட்டையால் தாக்கியதாகவும் தெரிகிறது.  . மேலும், யாரிடம் வேண்டுமானாலும் சொல்லு , என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி சாதி பெயரை சொல்லி மாணவனை  திட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீட்டுக்குச் சென்ற மாணவன், தன்னை உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். அவரது உடல், கைகள் மற்றும் கால்களில் தோல் சிவந்து, மணிக்கட்டு வீங்கியிருந்தது. இதனால், பெற்றோர் மாணவனை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவம் குறித்து குத்தாலம் காவல் நிலையத்தில் மாணவனின்பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அத்துமீறி நடந்து கொண்டதால் மாணவனை தாக்கியதாக உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்ததாகவும், பள்ளி நிர்வாகம் அவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web