மதுரையை குலுங்க வைத்த திருவிழா.. 100 ஆடுகளை பலியிட்டு 10,000 பேருக்கு கறி விருந்து!

 
கரும்பாறை முத்தையா கோவில்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் உள்ளது கரும்பாறை முத்தையா கோவில். அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவில் திருவிழாவில் முறைப்படி ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வழக்கம் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

விழாவில் பலியிடப்படுவதற்காக கோவிலிலேயே ஏராளமான ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. அதேபோல் பக்தர்களும் ஏராளமானோர் காணிக்கையாக செலுத்த ஆடுகளை வளர்த்து, திருவிழாவின்போது கோவிலில் சென்று பழியிடுவர். 

கரும்பாறை முத்தையா கோவில்

அந்த வகையில், கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் ஒவ்வொன்றாக பலியிடப்பட்டன. பின்னர் 2,500 கிலோ அரிசியுடன் சோறு தயார் செய்து, அசைவ உணவு சமைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அந்த வட்டாராத்தை சேர்ந்த ஆண்களுக்கு கோவில் அருகே பரிமாறப்பட்டது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த கறி விருந்தில் பங்கேற்ற நிலையில், அவர்களுக்கு வாழை இலையில் சாதமும், ஆட்டுகறி குழம்பும் பரிமாறப்பட்டது. அத்துடன் திருவிழா முடிவுக்கு வந்தது. ஒரு வாரத்திற்கு பின்பு, சாப்பிட்ட இலைகள் காய்ந்த பின்னரே பெண்கள் இந்த கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது.

கரும்பாறை முத்தையா கோவில்

இந்த கறி விருந்தில் திருமங்கலம், சொரிக்காம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான், கருமாத்தூர், செல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web