உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்தது... ஊராட்சி ஒன்றியங்களுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்!
தமிழகத்தில் 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் ஜனவரி 5ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், பதவிக் காலம் முடியவுள்ள 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன. குறிப்பாக, சில ஊராட்சி பகுதிகளை, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் இணைப்பதற்கான பணிகள் நடக்க வேண்டியுள்ளன. இதனால், பதவிக்காலம் முடிவடைய உள்ள ஊரக உள்ளாட்சிகளில், சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மாவட்டங்களில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் 05.01.2025 உடன் முடிவடைந்துள்ளது. இந்த மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும் வரை, மூன்றடுக்கு ஊராட்சிகளின் நிர்வாகம் செம்மையாக நடைபெறுவதை உறுதிசெய்திட 06.01.2025 முதல் 05.07.2025 வரை தனி அலுவலர்களை நியமனம் செய்து அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் , ஒவ்வொரு ஊராட்சியிலுள்ள தீர்மானப்புத்தகம், பிற பதிவேடுகள், ரொக்கப்புத்தகங்கள் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத காசோலை புத்தகங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியற்றை பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும். பொறுப்பில் எடுத்துக்கொண்டதற்கான அறிக்கையினை 08.01.2025 காலை 10.00 மணிக்குள் ஊராட்சிகளின் இணைக்கப்பட்டுள்ளது.
05.01.2025- தேதியில் காசாக்கப்படாமல் நிலுவைய 26 காசோலைகளைக் வங்கியில் அனுமதிக்கும்போது வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்க வேண்டும். வங்கி மேலாளர்களுக்கு முன்னோடி வங்கி மேலாளர் மூலம் உடனடியாக சுற்றறிக்கை அனுப்பிட வேண்டும். சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஜனவரி 6 அன்று முற்பகல் நிர்வாக நடைமுறைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதையும் அதற்கான விவரத்தினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஊராட்சி நிர்வாகத்தைத் திறம்பட செயல்படுத்திட உரிய அறிவுரைகள் வழங்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 9,624 கிராம ஊராட்சிகள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 28 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!