மொபைல் ஆப் மூலம் இளம்பெண் அறிமுகம்... ரூ.1.2 லட்சம் பணம் பறித்து ஆப்பு வைத்த இளம்பெண்!

 
டிண்டர் மோசடி

டெல்லியில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞருக்கு 'டிண்டர்' ஆப் மூலம் வர்ஷா என்ற இளம்பெண் அறிமுகம் ஆகியுள்ளார். கிழக்கு டெல்லியின் விகாஸ் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிளாக் மிரர் கஃபே என்ற உணவகத்திற்கு தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அந்த இளைஞனை பெண் அழைத்துள்ளார்.  இதன்படி இருவரும் அந்த உணவகத்திற்கு சென்று கேக் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் சாப்பிட்டனர். அப்போது வர்ஷா தனது குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு அவசரமாக அங்கிருந்து சென்றுவிட்டார். அப்போது உணவக ஊழியர்கள் அந்த இளைஞரிடம் அவர் சாப்பிட்ட தொகைக்கான ரசீதை கொடுத்துள்ளனர்.

மோசடி

அந்த ரசீதை பார்த்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அந்த ரசீதில் அவர் செலுத்த வேண்டிய தொகை ரூ.1,21,917.70. இதுகுறித்து உணவக மேலாளரிடம் கேட்டபோது, ​​அவரை தனியாக அழைத்து சென்று மிரட்டியுள்ளனர். இதன் காரணமாக அந்த இளைஞர் உணவக உரிமையாளர் அக்ஷய் பஸ்வாவின் வங்கி கணக்கில் ரூ.1.2 லட்சத்தை ஆன்லைனில் செலுத்தினார். பின்னர், உணவகத்தில் இருந்து வெளியே வந்த வாலிபர் நேராக காவல் நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவத்தை போலீஸாரிடம் கூறியுள்ளார். அந்த வாலிபர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சஞ்சய் குப்தா தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு சென்று விசாரணை நடத்தி அக்ஷய் பஸ்வாவை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த உணவகத்தில் அக்ஷய் பஹ்வா, அன்ஷ் குரோவர் மற்றும் வான்ஷ் பஹ்வா என மொத்தம் 3 உரிமையாளர்கள் இருப்பதாகவும், அவர்கள் "டேபிள் மேனேஜர்கள்" என்ற பெயரில் சிலரை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி, உணவகத்தில் பணிபுரியும், 'டேபிள் மேனேஜர்' ஆர்யன், 'வர்ஷா' என்ற தவறான பெயரில், ஆன்லைன் விண்ணப்பம் மூலம், சம்பந்தப்பட்ட இளைஞரை தொடர்பு கொண்டார். அப்சன் பர்வின் என்ற 25 வயது பெண்ணும் இந்த திட்டத்தில் உடந்தையாக இருந்துள்ளார். அனைவரும் திட்டமிட்டு அந்த இளைஞரை உணவகத்திற்கு வரவழைத்து ஏமாற்றினர்.

இதையடுத்து அப்சன் பர்வினை போலீசார் தேடி வந்தனர். அந்த பெண் வேறொரு உணவகத்தில் வேறொரு ஆணுடன் "டேட்டிங்" செய்து கொண்டிருந்த போது, ​​போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார். பல இளைஞர்களை திட்டமிட்டு ஏமாற்றி பணம் பறித்துள்ளதாகவும், பெரும்பாலான நேரங்களில் புகார் கொடுக்க யாரும் முன்வருவதில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த மோசடி திட்டத்தின் மூலம் அவர்கள் பெற்ற பணத்தில் 15% அப்சன் பர்வீனுக்கும், 45% உணவகத்தின்  மேலாளர்களுக்கும், மீதமுள்ள 10% உணவக உரிமையாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

கைது

டெல்லி மட்டுமின்றி மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் இதுபோன்ற மோசடிகள் நடப்பதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் அப்சன் பர்வீன் மற்றும் அக்ஷய் பஸ்வா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web