மீண்டும் டிக்டாக் செயலி... அமெரிக்கா , சீனா அதிபர்கள் தொலைபேசி உரையாடல்.!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் நேற்று தொலை பேசி மூலம் உரையாடல் நடத்தினர். டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தானும் டிக்டாக் ஒப்பந்தத்தில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் வர்த்தகம், சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போர் குறித்து விவாதிக்க ஆறு வாரங்களில் தென் கொரியாவில் நேருக்கு நேர் சந்திப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இது குறித்து ட்ரம்ப் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் “ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நான் ஒரு நல்ல உரையாடலை நடத்தினேன். அவர் டிக்டாக் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஒப்பந்தம் முடிவடையும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். நாங்கள் அதில் கையெழுத்திட வேண்டும், டிக்டாக் ஒப்பந்தம் விரைவில் நடக்க உள்ளது, முதலீட்டாளர்கள் தயாராகி வருகின்றனர்” என கூறியிருந்தார்.

அமெரிக்கா சீனா நாட்டு அதிபர்கள் அக்டோபர் 31 ம் தேதி தென் கொரியாவின் கியோங்ஜுவில் தொடங்கும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தஉள்ளனர். 2026ல் தான் சீனாவுக்குச் செல்ல இருப்பதாகவும், பின்னர் ஜி அமெரிக்கா வருவார் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
