ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்திலிருந்து கழன்று ஓடிய டயர்... பயணிகள் கூச்சல்!

 
பேருந்து
 

மயிலாடுதுறை மாவட்டத்தில்  ஓடிக் கொண்டிருந்த அரசு பேருந்திலிருந்து டயர் ஒன்று திடீரென கழன்று ஓடியது. இதனால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேருந்தில் பயணம் செய்த 25 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பேருந்து  நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 12 மணிக்கு  புறப்பட்ட ‘ஏ8’ என்ற அரசு டவுன் பஸ் வடரங்கத்திற்கு  சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 25 பயணிகள் இருந்தனர். பேருந்தை ஓட்டுனர்  அன்பழகன் ஓட்டினார். கண்டக்டராக இங்கர்சால் பணியில் இருந்தார்.

அரசு பேருந்து விபத்து

இந்த பேருந்து பனங்காட்டங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென பேருந்தின்  இடதுபுற முன் டயர் கழன்று பேருந்துக்கு  முன்னே தனியாக சாலையில் 10 மீட்டர் தூரம் வரை ஓடியது. அதிர்ச்சியடைந்த டிரைவர், சமயோசிதமாக சாலையோரம் பேருந்தை நிறுத்திவிட்டு உள்ளே இருந்த  பயணிகளை   பத்திரமாக இறக்கி விட்டார்.  டிரைவர் கவனக்குறைவாக இருந்திருந்தால் அருகில் உள்ள தெற்கு ராஜன் வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்திருக்கலாம். அவரின் சமயோசித்தால்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனரை  அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web