ஊஞ்சலில் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. கதறி துடித்த பெற்றோர்கள்!

 
சிறுவன் பலி

சென்னை கொருக்குப்பேட்டை வீட்டு வசதி வாரிய குடியுருப்பு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருக்கு 12 வயதில் திவாகர் என்ற மகனும், ஆறு மாத குழந்தையும் உள்ளனர். இதில் மகன் திவாகர் கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பாபு தனது 6 மாத குழந்தைக்கு வீட்டில் புடவையில் ஊஞ்சல் கட்டி உள்ளார். அந்த ஊஞ்சலில் சிறுவன் திவாகரும் தினமும் விளையாடி வந்துள்ளான்.

இந்நிலையில், திவாகர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தபோது, ​​வீட்டின் வெளியே பெற்றோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.சிறுவன் திவாகர் விளையாடிக் கொண்டிருந்த ஊஞ்சல் புடவை எதிர்பாராதவிதமாக அவன் கழுத்தில் இறுக்கமாகச் சுற்றப்பட்டிருக்கிறது. அதிலிருந்து மீள முடியாமல் சிறுவன் மூச்சுத் திணறி இறந்துள்ளான். பின்னர் சிறிது நேரம் கழித்து பெற்றோர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளிய நிலையில் சிறுவன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே பெற்றோர் சிறுவனை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு சிறுவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web