தண்ணீர் தேடி வந்த மானுக்கு நேர்ந்த சோகம்.. கடித்துக் குதறிய நாய்கள்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

 
புள்ளிமான்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, திருவாலங்காடு அருகே உள்ள மணவூர் காப்புக்காட்டை சேர்ந்த 3 வயது பெண் புள்ளிமான் தண்ணீர் தேடி அருகில் உள்ள பொன்னத்தம்மன் கோவில் குளத்திற்கு வந்தது. அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள், மானை துரத்திச் சென்று கடித்து, மானின் பின் காலை கவ்வி நாய்கள் இழுத்து சென்றது.

இதில் படுகாயமடைந்த மான் வலியால் அலறி துடித்தது. இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் தொழுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அருள் விரைந்து வந்து நாய்களை விரட்டி மானை மீட்டனர்.மேலும், இதுகுறித்து உடனடியாக திருவாலங்காடு காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

ஆனால் வனத்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின், காயமடைந்த மானை மீட்டு, அருகில் உள்ள திருவாலங்காடு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், மானுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மானுக்கு பின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web